பெரும் பரபரப்பு... சிவகங்கையில் 50க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி!
Sep 10, 2026, 19:00 IST
சிவகங்கை மாவட்டம் மாங்குடி அருகே அமைந்துள்ள கோடாங்கிபட்டி கிராமத்தில் கடந்த சில நாட்களாகப் பலருக்குக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
கிராம மக்களிடையே காய்ச்சல் பரவியதைத் தொடர்ந்து, சுகாதாரத்துறையினர் விரைந்து சென்று அங்குள்ள குடிநீர் தொட்டி மற்றும் இதர நீராதாரங்களை நேரில் ஆய்வு செய்தனர்.
-
குடிநீரின் தரத்தைச் பரிசோதிப்பதற்காக நீராதாரங்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
-
மேலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வரும் பொதுமக்களுக்குத் தேவையான தீவிர மருத்துவச் சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன.

