உலகம் முழுவதும் அதிர்ச்சி... ஃபிஃபா அமைப்பில் சைபர் தாக்குதல்... தகவல்கள் திருட்டு!
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபா (FIFA) அமைப்பின் கணினி கட்டமைப்பில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டு, சில தனிப்பட்ட மற்றும் வர்த்தகத் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து ஹேக்கர்கள் உள்ளே நுழைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
FIFA HIT BY CYBERATTACK FIFA has confirmed a criminal cyberattack that exposed a limited amount of personal and business information through unauthorised access. The football governing body told Reuters that it strongly condemned the incident, describing the unlawful acquisition and publication of information, particularly personal data, as a serious breach of privacy. However, a person familiar with the matter said less than 0.1% of FIFA's total data was affected. No files relating to the abandoned FIFA Forward Enterprise project were accessed, the source added. FIFA has not disclosed how many individuals or organisations were affected, when the breach occurred or what business information was compromised. It also remains unclear whether any stolen information was published online. The scale of the breach may be limited, but the questions surrounding the exposed data remain. #FIFA #CyberAttack #DataBreach #CyberSecurity #Football #Privacy
— Diganta Guha (@diganta_guha) November 26, 2026
சுமார் 12 ஜிபி அளவிலான ஆவணங்கள் திருடப்பட்டதாகக் குற்றம்சாட்டும் ஹேக்கிங் குழு, அடையாள ஆவணங்கள் மற்றும் நிதித் தகவல்களை வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், நிறுவனத்தின் ஒட்டுமொத்தத் தரவில் மிகக் குறைந்த சதவீதமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொழில்நுட்பக் கோளாறு அல்ல எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சைபர் தாக்குதல் குறித்துச் சட்ட அமலாக்கத் துறைகளுடன் இணைந்து ஃபிஃபா தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. சமீப காலமாக ஐரோப்பிய கால்பந்து அமைப்புகளிலும் சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது
