FIFA WC : ஒரே போட்டியில் சாதனை படைத்த வோசின்ஹா.. 50 லட்சம் ரசிகர்கள் குவிந்தனர்!

 
கால்பந்து வோசின்ஹா கால்பந்து வோசின்ஹா
கால்பந்து 

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கேப் வெர்டே அணியின் 40 வயது கோல்கீப்பர் வோசின்ஹாவின் ஆட்டம் உலகையே வியக்க வைத்துள்ளது. பலம் வாய்ந்த ஸ்பெயின் அணிக்கு எதிரான ஆட்டத்தில், அசாத்தியமான திறமையால் கோல் விழாமல் தடுத்து போட்டியை 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிக்க வோசின்ஹா முக்கியக் காரணமாக அமைந்தார்.

அதிகாரப்பூர்வ போட்டித் தரவுகளின்படி, ஸ்பெயின் அணி ஆதிக்கம் செலுத்தி அடித்த ஆபத்தான பந்துகளில் 8 முக்கிய கோல் வாய்ப்புகளை வோசின்ஹா தடுத்து நிறுத்தினார். ஸ்பெயின் அணி 2.29 எக்ஸ்பெக்டெட் கோல்ஸ் விகிதத்துடன் 27 முறை கோல் அடிக்க முயற்சித்தும் வோசின்ஹாவின் தடுப்பு அரணை அவர்களால் தாண்ட முடியவில்லை.

தனது 40 ஆவது வயதில் உலகக் கோப்பையில் அறிமுகமாகி, அறிமுகப் போட்டியிலேயே கோல் எதுவும் விழாமல் 'கிளீன் ஷீட்' சாதனை படைத்த மிக வயதான கோல்கீப்பர் என்ற பெருமையை வோசின்ஹா பெற்றுள்ளார். மேலும், உலகக் கோப்பை வரலாற்றில் களம் கண்ட இரண்டாவது மிக வயதான அறிமுக வீரரும் இவரே.

இந்த ஒற்றைப் போட்டிக்குப் பிறகு சர்வதேச அளவில் வோசின்ஹா பெரும் பிரபலமடைந்துள்ளார். போட்டிக்கு முன்பு வரை சுமார் 50,000 ஆக இருந்த அவரது இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை, ஒரே நாளில் பல மடங்கு உயர்ந்து 31 லட்சத்தைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

போட்டியின் இறுதியில் ஆட்டநாயகன் விருதையும் வோசின்ஹா வென்றார். உலகக் கோப்பைத் தொடரில் முதல் முறையாக களம் கண்டுள்ள கேப் வெர்டே அணிக்கு இது மிக முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.