தூக்கு கயிறுடன் வேட்புமனு தாக்கல்.. நூதன முறையில் வாக்கு சேகரித்த சுயேச்சை வேட்பாளர்!

 
சங்கரபாண்டியன்

மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிட சுயேச்சை வேட்பாளர் ஒருவர் விநோதமான முறையில் கையில் தூக்கு கயிற்றுடன் வேட்பு மனு தாக்கல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பணப்பட்டுவாடா மற்றும் பணம் செலுத்தி வாக்களிப்பதற்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தவே தூக்கு கயிற்றுடன் வேட்பு மனு தாக்கல் செய்ததாக கூறினார்.

மதுரை மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் காலை 11 மணிக்கு தொடங்கியது. இத்தொகுதியில் 2வது சுயேச்சை வேட்பாளராக மதுரை செல்லூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சங்கரபாண்டியன் நூதன முறையில் தூக்கு கயிற்றில் டம்மி பணத்தை கட்டி வேட்புமனு தாக்கல் செய்தார். வாக்களிக்க பணம் வாங்குவதும் , கொடுப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விழிப்புணர்வு பதாகையுடன் வந்த சமூக ஆர்வலர் சங்கரபாண்டி கையில் கயிறு ஏந்தியபடி வந்தார்.

சுயேச்சை வேட்பாளர் சங்கரபாண்டியனிடம் இருந்த கயிறு  மற்றும் பேனர்களை   100 மீட்டர் தொலைவுக்கு முன்பாகவே  பறிமுதல் செய்தனர். மதுரை செல்லூர் பூந்தமல்லி நகரைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் சங்கரபாண்டியன் டைல்ஸ் ஒட்டும் தொழிலில் இருக்கிறார். தொழிலில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல், நீர்வளப் பாதுகாப்பு மற்றும் மக்கள் நல அறக்கட்டளையின் நிறுவனத் தலைவராகவும் இருந்துள்ளார்.

சங்கரபாண்டியன் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘பணம் கொடுத்து ஓட்டுப்போடுவதை எதிர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஊழல்வாதிகளுக்கு வாக்களிக்க கூடாது என்பதை வலியுறுத்தவும் தூக்கு கயிற்றில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன். அனைவரும், சட்டசபை மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்து விட்டேன்.சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டுள்ளேன்,'' என்றார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web