இன்று வேட்புமனு தாக்கல்... விஜயகாந்த் மகன் எம்.பி. ஆகிறாரா?

 
விஜய பிரபாகரன்

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் மார்ச் 16ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பேரம் நடந்துக் கொண்டிருந்த நிலையில், மாநிலங்களவைத் தொகுதியைக் குறிவைத்து கட்சிகள் தொகுதி பங்கீட்டில் பேச்சுவார்த்தை இழுத்து வந்தன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கும், தேமுதிகவுக்கும் தலா 1 மாநிலங்களவைத் தொகுதியை திமுக விட்டுக் கொடுத்திருக்கிறது. 

சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில், தற்போது காலியாகும் 6 இடங்களில் திமுக கூட்டணிக்கு 4 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த 4 இடங்களில் இரண்டு இடங்களைத் தனது கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக ஒதுக்கியுள்ளது. திமுக நேரடியாகப் போட்டியிடும் இரண்டு இடங்களுக்குப்  திமுகவின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவாவை அறிவித்துள்ளது. இவர் ஏற்கனவே பலமுறை மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்

அடுத்து திமுகவின் செய்தித் தொடர்புத் துறைச் செயலாளர் மற்றும் ஊடக விவாதங்களில் கட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துரைக்கும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்: இவர் முன்னாள் தேமுதிக நிர்வாகி என்பதும் குறிப்பிடத்தக்கது. திமுக கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையில் ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.  அதே போன்று சமீபத்தில் திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிகவுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தேமுதிக வரலாற்றில் முதன்முறையாக அந்தப் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கவுள்ளது.

திருச்சி சிவா

தேர்தல் கால அட்டவணை

வேட்புமனு தாக்கல் இறுதி நாள்: மார்ச் 5, 2026 (நாளை).

மனுக்கள் பரிசீலனை: மார்ச் 6, 2026.

மனு திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 9, 2026.

தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை: மார்ச் 16, 2026.

மாநிலங்களவை உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்படுபவர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும். தேமுதிக சார்பில் வேட்பாளராக எல்.கே. சுதீஷ் அல்லது விஜய பிரபாகரன் ஆகியோரில் யார் களம் இறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.