மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு ரூ 5லட்சம் நிதியுதவி... முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, பொய்யாவயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவன் ஒருவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இந்த மாணவனின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் மாணவனின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, பொய்யாவயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் அறிவிப்பு#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR@CMOTamilnadu@mp_saminathan pic.twitter.com/3219sOnQJR
— TN DIPR (@TNDIPRNEWS) January 24, 2025
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், பத்தரசன்கோட்டை கிராமத்தில் வசித்து வரும் பள்ளி மாணவன் 14 வயது சக்தி சோமையா. இவர் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், பொய்யாவயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வந்த நிலையில் ஜனவரி 24ம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் பள்ளியின் மின்சார வயர்களில் ஏற்பட்ட மின்சார கசிவினால் திடீரென மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
இந்த விபத்தில் உயிரிழந்த மாணவன் சக்தி சோமையாவின் உயிரிழப்பு அவரது குடும்பத்தினருக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த மாணவன் சக்தி சோமையாவின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அத்துடன் உயிரிழந்த மாணவனின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவு பிறப்பித்துள்ளேன் எனக் கூறியுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!