கர்ப்பிணிகளுக்கு ₹5,000 நிதியுதவி... மத்திய அரசின் 'பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா' திட்டம்!

 
கர்ப்பிணி நிதியுதவி உதவித்தொகை

மத்திய அரசின் 'பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா' திட்டத்தின் கீழ், தகுதியுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. தகுதியுள்ள கர்ப்பிணிகளுக்கு அவர்களின் முதல் குழந்தைக்கு ₹5,000 நிதியுதவி வழங்கப்படுகிறது.

கர்ப்பிணி

இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாகப் பிறந்தால், அப்பெண்ணிற்கு ஊக்குவிப்பாக ₹6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

பரபரப்பு! விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸ்! நிறைமாத கர்ப்பிணி உட்பட 3 பேர் பலி!

பட்டியல் இன மற்றும் பழங்குடியின பெண்கள், வறுமைக் கோட்டிற்குப் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் ஆகியோருக்கு வழங்கப்படும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ₹8 லட்சத்திற்கு குறைவாக உள்ள பெண்கள் மற்றும் இதர தகுதியுடையவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.