இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்!

 
ரேஷன்

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கான கைவிரல் ரேகை / விழித்திரை சரிபார்ப்பு சிறப்பு முகாம் இன்று தொடங்குகிறது. ஆகஸ்ட் 8 மற்றும் ஆகஸ்ட் 9 ஆகிய இரண்டு நாட்கள் மாநிலம் முழுவதும் இச்சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இச்சேவை வழங்கப்படுகிறது.

கை ரேகை மோசடி

இதுவரை e-KYC செய்யாதவர்கள் மற்றும் வெளியூர்களில் தங்கியிருப்பவர்கள், தங்களுக்கு அருகில் உள்ள எந்தவொரு நியாயவிலைக் கடைகளுக்கும் சென்று இச்சேவையைப் பெற்றுக்கொள்ளலாம். முகாமிற்குச் செல்பவர்கள் தங்களுடைய குடும்ப அட்டை மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றைத் தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும்.

ரேஷன்

பயோமெட்ரிக் கருவி மூலம் கைவிரல் ரேகை அல்லது கண் கருவிழி பதிவு மூலம் எளிதாக e-KYC சரிபார்ப்பை முடித்துக் கொள்ளலாம். முன்னுரிமை மற்றும் அனைத்து வகை குடும்ப அட்டைகளிலும் 100% e-KYC பதிவை எட்டும் நோக்கில் அரசு இச்சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்துள்ளது.