ஏற்றுமதி குடோனில் பயங்கர தீ விபத்து... பல லட்சம் மதிப்பில் சேதம்!

தூத்துக்குடி விஇ ரோட்டில் டிஎஸ்எப் வணிக வளாகம் எதிரே மில்லர் புரத்தைச் சேர்ந்த கிருஷ்ண சங்கர் என்பவருக்கு சொந்தமான தும்பு குடோன் உள்ளது. இங்கிருந்து தும்புகள் பேக் செய்யப்பட்டு வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும். இந்நிலையில் நேற்று இரவு தும்பு குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அருகே குடியிருப்புகளில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகர தீயணைப்புத் துறையினர் இரண்டு வண்டிகளில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ளான தும்பு எரிந்து சேதமாய் இருக்கும் என கூறப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் அருகே இருந்த குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. இதன் காரணமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த தீவிபத்து குறித்து மத்திய பாகம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!