திருத்தணி முருகன் கோயிலில் திடீர் தீ விபத்து - பக்தர்கள் மத்தியில் பரபரப்பு!
Sep 30, 2026, 07:50 IST
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் விளக்கு ஏற்றும் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பிரசித்தி பெற்ற திருத்தணி முருகன் கோயிலில் உள்ள விளக்குகள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் திடீரெனத் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்த உடனே கோயில் ஊழியர்களும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்று தீவிரமாகப் போராடித் தீயை முழுமையாக அணைத்தனர்.

தீ உடனடியாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் நிலைமை சீரடைந்தது. இந்த விபத்துக்கான காரணம் மற்றும் சேத விவரங்கள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
