சவுதி அரேபியா கச்சா எண்ணெய் கிடங்கில் பயங்கர தீ விபத்து!

 
சவுதி அரேபியா கச்சா எண்ணெய் கிடங்கில் தீ விபத்து

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள கச்சா எண்ணெய் கிடங்கில் இன்று மாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்து பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

எண்ணெய்

விபத்து குறித்துத் தகவலறிந்து உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் பாதுகாப்புத் துறையினர், தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஏமன் நாட்டில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வரும் சூழலில், இந்தத் தீ விபத்து ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணைத் தாக்குதலால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறால் நேரிட்டதா என்பது குறித்துச் சவுதி பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.