திருமண நிகழ்ச்சியில் திடீர் தீ விபத்து; 22 பேர் பலி - காங்கோவில் துயரம்!

 
காங்கோ திருமண நிகழ்ச்சியில் தீ விபத்து

மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடான காங்கோவில், திருமண நிகழ்ச்சி நடைபெற்ற கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காங்கோ நாட்டின் தலைநகரான கின்ஷாசா நகரில் உள்ள லிங்வாலா பகுதியில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தில் நைட்டு நேரத் திருமண நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தாய்லாந்து பாங்காக் கேளிக்கை விடுதி ஹோட்டல் தீ விபத்து

நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அந்தக் கட்டிடத்தில் திடீரெனத் தீப்பிடித்தது. மளமளவெனப் பற்றிய தீயால் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் வெளியேற முடியாமல் உள்ளே சிக்கிக் கொண்டனர்.

தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக விரைந்து வந்து நீண்ட நேரம் போராடித் தீயை அணைத்தனர். மேலும், இடிபாடுகளிலும் தீயிலும் சிக்கிய பலரை மீட்டனர். எனினும், இந்த கோர விபத்தில் சிக்கி திருமண விழாவில் பங்கேற்ற 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்துக் காவல்துறையினர் தீவிர வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.