தீக்கிரையான பிரபல ஹாலிவுட் நடிகையின் பங்களா.. மனம் உடைந்த நடிகை சோக பதிவு!

 
காரா டெலிவிங்னே

காரா டெலிவிங்னே பிரபல ஹாலிவுட் நடிகை. அன்னா கரேனினா, தி ஃபேஸ் ஆஃப் ஏஞ்சல், சூசைட் குவாட், லண்டன் ஃபீல்ட்ஸ், மிஸ் அமெரிக்கானா போன்ற பல படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஸ்டுடியோ சிட்டியில் எட்டாயிரம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமான பங்களா வைத்துள்ளார். நேற்று முன்தினம் அந்த பங்களாவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

13 லாரிகளில் வந்த 94 தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீயணைப்பு வீரர் உட்பட இருவர் காயமடைந்தனர். விபத்து நடந்தபோது நடிகை காரா பங்களாவில் இல்லை. படப்பிடிப்புக்காக லண்டன் சென்றிருந்தார். இந்த விபத்தால் பங்களாவின் சில பகுதிகளில் மேற்கூரை இடிந்து விழுந்தது. விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நடிகை காரா டெலிவிங்னே, "என்னால் நம்பவே முடியவில்லை. இதை கேட்டதும் என் இதயம் உடைந்தது. கண் இமைக்கும் நேரத்தில் வாழ்க்கை மாறிவிடும். அதனால் கிடைத்ததை வைத்து திருப்தியாக வாழுங்கள். என பதிவிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web