நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் திடீரென தீப்பற்றி எரிந்து நாசம் - சிவகாசியில் பரபரப்பு!
சிவகாசி ரயில் நிலையம் அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரூ.16 லட்சம் மதிப்பிலான சொகுசு கார் திடீரென தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.
சிவகாசி ஞானகிரி சாலையைச் சேர்ந்த கண்ணன் என்பவர், தனது சொகுசு காரைச் சிவகாசி ரயில் நிலையம் அருகே உள்ள சாலையோரத்தில் நிறுத்தி வைத்திருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாகக் காரில் இருந்து திடீரெனத் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இது குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தண்ணீரைப் பீய்ச்சி அடித்துத் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனர்.
தீப்பற்றி எரிந்த சமயத்தில் காரின் உள்ளே யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாகப் பெருஞ் சேதமோ அல்லது உயிர்ச்சேதமோ தவிர்க்கப்பட்டது. இருப்பினும், தீயணைப்புத் துறையினர் தீயை அணைப்பதற்குள் கார் முழுவதுமாகக் காலியானது. எறிந்த காரின் மதிப்பு சுமார் ரூ.16 லட்சம் எனக் கூறப்படுகிறது. காரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகத் தீ விபத்து நிகழ்ந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்துச் சிவகாசி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
