ஜவுளி கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்!

 
 நித்தியா ஜவுளி கடை

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த பருவதமலை அடிவாரத்தில் உள்ள தென்மாதிமங்கலம் கிராமத்தில் நித்தியா ஜவுளி கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில், இன்று  காலை  கடை உரிமையாளர் கடையை திறந்து வைத்து விட்டு பக்கத்தில் உள்ள மெடிக்கலுக்கு மருந்து வாங்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென தீப்பற்றி ஜவுளி கடையில் உள்ள பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து சேதம் அடைந்தது. 

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடலாடி காவல்துறையினர் போளூர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்க இரண்டு மணி நேரமாக போராடி தீயை அணைத்து கருகிய நிலையில் உள்ள துணிகளும் பல்வேறு பொருட்களையும் வெளியே எடுத்தனர்.


 
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தீ விபத்து குறித்து கடலாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web