அதிர்ச்சி வீடியோ!! மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து!! 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் வெளியேற்றம்!!

 
மருத்துவமனை தீவிபத்து
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் சஹிபக் பகுதியில் தனியார்  மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் 2வது தளத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீ மருத்துவமனையின் மேல் தளத்திற்கும் சென்று விட்டது. இதனால் நோயாளிகள் கத்தி கூச்சலிட்டனர். உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல்தெரிவிக்கப்பட்டது. 













இதன் பேரில்  30 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள் மருத்துவமனையில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ மளமளவென பரவியதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என முதல் கட்டதகவல்கள் வெளியாகியுள்ளன. 
தீவிபத்து

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மருத்துவமனையில் தீப்பிடித்ததால் நோயாளிகள் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் உள்ளனர். இவர்கள் அனைவரும் அருகில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web