பட்டாசு ஆலைகளில் அரசு சோதனைகளால் பாதிப்பிருக்காது - சட்டமன்றத்தில் அமைச்சர் கீர்த்தனா விளக்கம்!

 
அமைச்சர் கீர்த்தனா தங்கம் தென்னரசு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிவகாசி பட்டாசு ஆலைகளில் மேற்கொள்ளப்படும் அரசு அதிகாரிகளின் ஆய்வுகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் வேளையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில், அரசு அதிகாரிகள் ஆய்வு என்ற பெயரில் அடிக்கடி சென்று தொந்தரவு செய்வதாக ஆலை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கீர்த்தனா

பண்டிகைக் காலத்தில் உற்பத்தி பாதிக்கப்படாமல் இருக்கவும், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் சுமுகமாக நடக்கவும் இத்தகைய அடிக்கடி நடத்தப்படும் ஆய்வுகளைக் குறைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார்.

கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் கீர்த்தனா, "பட்டாசு ஆலைகளில் விபத்துகளைத் தவிர்க்கவும், பாதுகாப்பு விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்யவும் மட்டுமே ஆய்வுகள் நடத்தப்படுகின்றன" எனக் குறிப்பிட்டார்.

அரசு அதிகாரிகளால் நடத்தப்படும் இந்த வழக்கமான ஆய்வுகளால் சட்டப்பூர்வமாக இயங்கும் பட்டாசு ஆலைகளின் உற்பத்தியோ அல்லது செயல்பாடுகளோ எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.