திருச்சூரில் பட்டாசு ஆலை வெடிவிபத்து... 13 பேர் உடல் சிதறி பலி - பிரதமர் மோடி இரங்கல்!

 
பட்டாசு வெடிவிபத்து பட்டாசு வெடிவிபத்து

கேரள மாநிலம் திருச்சூர் அருகே நேற்று ஏற்பட்ட பயங்கர பட்டாசு ஆலை வெடி விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர வைத்துள்ளது. திருச்சூர் பகுதியில் இயங்கி வந்த தனியார் பட்டாசுத் தொழிற்சாலையில், நேற்று தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து நேரிட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட தீப்பொறியால் பட்டாசுகள் வெடித்துச் சிதறத் தொடங்கின. சில நிமிடங்களிலேயே ஆலை முழுவதுமாக தீப்பற்றி எரிந்ததோடு, அடுத்தடுத்து ஏற்பட்ட வெடிப்புச் சத்தத்தால் அந்தப் பகுதியே போர்க்களம் போல் மாறியது.

பட்டாசு வெடிவிபத்து

இந்த கோர விபத்தில் இதுவரை 13 தொழிலாளர்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வெடி விபத்தின் தாக்கம் பல கிலோமீட்டர் தூரத்திற்கு உணரப்பட்டதோடு, ஆலையின் பிரம்மாண்டமான கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. இடிபாடுகளுக்குள் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படும் நிலையில், மீட்புப் பணிகள் ராணுவ வேகத்தில் முடுக்கி விடப்பட்டுள்ளன.

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்து வந்தனர். ஜேசிபி இயந்திரங்களின் உதவியுடன் கட்டிட இடிபாடுகளை அகற்றி, உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்கும் போராட்டமானது நடைபெற்றது.

விருதுநகர் பட்டாசு சிவகாசி வெடிவிபத்து

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஹெலிகாப்டர் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். இந்தத் துயரச் சம்பவம் திருச்சூர் மற்றும் கேரளா முழுவதும் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.