கையில் பிடித்து பட்டாசு வெடித்ததில் விபரீதம்... 10 வயது சிறுவன் உயிரிழப்பு!

 
பட்டாசு

நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டங்கள் நிறைவுற்ற நிலையில், டெல்லியின் நரேலா பகுதியில் தீபாவளி கொண்டாட்டத்தின்போது, கையில் வைத்துப் பட்டாசு வெடித்த 10 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

ரிஷி என்ற அந்தச் சிறுவன், தீபாவளியன்று இரவு சுமார் 9.45 மணியளவில் தனது வீட்டின் முன்பு கையில் பிடித்தபடி அனார் வகை பட்டாசை வெடிக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பட்டாசு கையிலேயே வெடித்துள்ளது. இதில் சிறுவனின் மார்புப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

 டெல்லி போலீஸ்

காயமடைந்த சிறுவனை குடும்பத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக போலீசார் கூறினர். சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என சிறுவனின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டு குறித்தும் சம்பவத்தின் பின்னணி குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது