பரபரப்பு... அயோத்தி ராமர் கோவிலில் துப்பாக்கி சூடு.. ஜவான் மீது பாய்ந்த தோட்டா!

 
அயோத்தி

 உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டது முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாவட்ட மற்றும் கோவில் நிர்வாகங்கள் இணைந்து 8000 போலீசாரை கோவில் வளாகத்தில் காவலுக்கு நிறுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட பிஏசி ஜவான் ஒருவருக்கு துப்பாக்கிக் காயம் ஏற்பட்டது. மாகாண ஆயுதக் காவலர்  ஜவான் மர்மமான சூழ்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தார்.


 

படுகாயம் அடைந்த ஜவான் ராம் பிரசாத், சிகிச்சைக்காக லக்னோ ட்ராமா சென்டருக்கு மாற்றப்பட்டார்.  துப்பாக்கியில் இருந்து பாய்ந்த தோட்டா ஜவானின் மார்பில் தாக்கி காயம் ஏற்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏகே 47 தோட்டாவால் ஜவான் ஒருவர் மார்பில் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற தகவலால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து, அயோத்தி ராமர் கோவில் வளாகத்தில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.  
அயோத்தி ராமர் கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவருக்கு காயம் ஏற்படுத்திய தோட்டா, அவரது கையிலிருந்த துப்பாக்கியில் இருந்து   வெளியானதா அல்லது மர்ம நபரா என்பது  குறித்து சரியான தகவல்கள் தெரியவில்லை. 

அயோத்தி


இச்சம்பவம் குறித்து உடனடி விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிந்த பின்னரே துல்லியமான காரணம் தெரியவரும்.  53 வயதான ராம் பிரசாத், ஸ்ரீ ராம் ஜென்மபூமி வளாகத்தின் வளாகத்தில்  பணியில் இருந்தபோது எதிர்பாராதவிதமாக நெஞ்சில் குண்டு பாய்ந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.   
துப்பாக்கியால் ஒருவர் காயமடைந்ததும் சக ஊழியர்கள் அவரை  உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். காயமடைந்த ஜவான் அமேதியைச் சேர்ந்தவர் அவர் 32வது கார்ப்ஸ் பிஏசியில் பணியாற்றி வந்தார்.    கோவில் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சக பணியாளர்கள், இராணுவத்தினரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web