வணிகவளாகம் அருகே துப்பாக்கிச் சூடு... 7 சிறுவர்கள் கவலைக்கிடம்... அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி கலாச்சாரம்!

 
அமெரிக்கா

 அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு கலாச்சாரம் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. பள்ளி செல்லும் பிள்ளைகள் தொடங்கி கைத்தடி கொண்டு நடக்கும் முதியவர் வரை அனைவரது கையிலும் பாதுகாப்பு என்ற பெயரில் கைத்துப்பாக்கிகள்  தான். இவை அமெரிக்காவின்  சுகபோக வல்லரசு கலாச்சாரத்திற்கு கருப்பு புள்ளிகளாய் அமைந்துள்ளன. நாடு முழுவதும் வேரோடி வரும் புல்லுருவிகளையும், அறியா பிள்ளைகளையும் இதிலிருந்து காக்கும் வழிதெரியாமல் வல்லரசு தத்தளித்து வருகிறது.

அந்த வரிசையில் அமெரிக்காவின் இண்டியானா மாகாணம் இண்டியானாபோலிஸ் நகரில் நேற்று நள்ளிரவில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின்போது திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.  மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த பெரும் வணிக வளாகத்திற்கு வெளியே இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் வெளியாகி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.  
துப்பாக்கி சூடு சத்தம் கேட்டு, ரோந்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் தப்பி சென்று விட்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த தாக்குதலில் 7 இளைஞர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.  அவர்களின் வயது 12 முதல் 17 வயது வரை இருக்கலாம் என பெருநகர காவல்துறை துணை தலைவர் தான்யா டெர்ரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா

 


மேலும் இது குறித்து  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்   அங்கு ஏராளமான இளைஞர்கள் திரண்டிருந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இளைஞர்கள் தங்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளுக்கு துப்பாக்கியால் தீர்வு காணும் சூழல் மீண்டும் ஏற்பட்டுள்ளது.  தாக்குதலில் ஒன்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்  என விசாரணையில் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் தாக்குதல் தொடர்பாக இதுவரை ஒருவரும் கைது செய்யப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது  வணிக வளாக வாயிலில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web