உலக ஜூனியர் ஸ்குவாஷ் பட்டம் வென்ற முதல் இந்தியர்... அனாஹத் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!
உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்த இந்தியாவின் இளம் வீராங்கனை அனாஹத் சிங்கிற்குப் பிரதமர் நரேந்திர மோடி மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அனாஹத் சிங்கின் வரலாற்றுச் சாதனை குறித்து பிரதமர், உலக ஜூனியர் ஸ்குவாஷ் தொடரில் தனது அபாரத் திறமையை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய அனாஹத் சிங்கின் இந்த வெற்றி, இந்திய விளையாட்டு உலகிற்குப் பெருமை சேர்த்துள்ளது.

அனாஹத் சிங்கின் இந்த மகத்தான வெற்றி, நாட்டின் இளம் தலைமுறையினரிடையே ஸ்குவாஷ் விளையாட்டு மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் என்றும், பல இளைஞர்கள் சர்வதேச அளவில் சாதனைகளைப் படைக்க இது மிகப்பெரிய உந்துதலாக அமையும் என்றும் பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
18 வயதேயான அனாஹத் சிங், சர்வதேச ஸ்குவாஷ் அரங்கில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளைப் படைத்து இந்தியாவுக்குப் பெருமை சேர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
