பனையூரில் இன்று முதல் ஆலோசனைக் கூட்டம்... தவெக மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் போட்ட உத்தரவு!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சமீபத்தில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தின் படி மொத்த 120 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.2024 பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகத்தை தொடங்கி பிரம்மாண்டமாக முதல் அரசியல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் அடுத்து 2026 ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் களம் காண்கிறார்.
தற்போது தேர்தலுக்கு ஆயத்தமாகி வரும் விஜய் ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது நடிகர் விஜய்யின் கடைசி படமாக இருக்கும் நிலையில் அரசியல் கதையில் படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு முழுமையாக அரசியலில் மட்டுமே விஜய் ஈடுபடுகிறார். நடிகர் விஜய் தலைமையில் சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் 4 நாட்களுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது.
இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொள்ள இருக்கின்றனர். அதன்படி இன்று முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் நிர்வாகிகள் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளிடம் விஜய் நேர்முகத் தேர்வு நடத்த இருக்கிறார். மேலும் 2026 தேர்தலில் களம் காணும் விஜய் தற்போது கட்சியை பலப்படுத்தி முக்கிய நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!