நாங்குநேரி சம்பவத்தில் முதல்கட்ட அறிக்கை வெளியீடு!!

 
நாங்குநேரி

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவன் மற்றும் அவரது சகோதரி  இருவரும்  வீடு புகுந்து சக மாணவர்களால் ஆயுதம் கொண்டு தாக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்கள்  நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

நாங்குநேரி
இதனிடையே, பாதிக்கப்பட்ட பள்ளி மணவரும், அவரது தங்கையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களுக்கு ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து 40 நாட்கள் ஓய்வில் இருக்க பரிந்துரை செய்துள்ளனர்.தமிழகத்தையே  உலுக்கிய இச்சம்பவம் குறித்து நெல்லை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் விசாரணை நடத்தி தனது முதற்கட்ட விசாரணை அறிக்கையை பள்ளிக்கல்வி இயக்குனரிடம் தாக்கல் செய்துள்ளார்.


அரிவாள் வெட்டால் பாதிக்கப்பட்ட மாணவர் தொடர்ந்து இதே பள்ளியில் படிப்பது சாத்தியமற்றது. அம்மாணவனை  விடுதியுடன் கூடிய வேறு பள்ளியில் படிக்க வைக்க நடவடிக்கை எடுக்கவும் அவ்வறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து அவர் தாக்கல் செய்த முதற்கட்ட விசாரணை அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர் ஜாதிய ஆதிக்கம் மனோபாவம் கொண்ட மாணவர்களால் வீட்டிற்குள் புகுந்து கொடூரமாக வெட்டப்பட்டார்

நாங்குநேரி

.இந்த விவகாரத்தில் துறை ரீதியிலான முதற்கட்ட  விசாரணை மேற்கொண்டு அறிக்கையை பள்ளிக்கல்வித்துறையிடம் திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு தாக்கல் செய்தார்.பள்ளியில் மாணவருக்கு நடைபெற்ற சாதிய கொடுமைகள் குறித்து விரிவான தகவல்கள் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. மேலும் அவர்களை விடுதியுடன் கூடிய வேறு பள்ளியில் படிக்க வைக்க நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!