புரட்டாசி முதல் ஞாயிறு.. தமிழகத்தில் இறைச்சி கடைகள் வெறிச்சோட்டம்!

 
தூத்துக்குடி மீன்கள் இறைச்சி

புரட்டாசி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள இறைச்சிக் கடைகள் அனைத்தும் வழக்கத்தை விட வெறிச்சோடி காணப்பட்டன.

ஆன்மிக சிறப்புமிக்க புரட்டாசி மாதம் பிறந்துள்ள நிலையில், இம்மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் பெருமாள் வழிபாட்டிற்காகப் பலரும் அசைவ உணவைத் தவிர்த்து விரதம் இருப்பது வழக்கம்.

மீன் கடை மார்க்கெட் அசைவம்

அந்த வகையில், புரட்டாசியின் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று பொதுமக்களில் பெரும்பாலானோர் சைவ உணவைத் தேர்ந்தெடுத்ததால், கோழி மற்றும் ஆட்டிறைச்சிக் கடைகளில் வழக்கமான கூட்டமின்றி வெறிச்சோடிய சூழல் நிலவியது.

இறைச்சி விற்பனை வெகுவாகக் குறைந்ததன் காரணமாக வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர்கள் வழக்கம் போல் வியாபாரமின்றி மாற்று ஏற்பாடுகளில் கவனம் செலுத்தினர்.