மாவட்டத்திலேயே முதல் பெண் நடத்துனர்... நெகிழ்ச்சி!

 
ரம்யா

 தமிழகத்தின் முதல் பெண் ஓட்டுநர் வசந்தகுமாரி . இவர் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்தவர்.  இவர் 1993ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்டார். தற்போது ஓய்வு பெற்று இருக்கும் வசந்தகுமாரி விழுப்புரத்தில் பெண்கள் கருணை இல்லத்தில் பணிபுரிந்து வருகிறார்.  தற்போது அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தில் முதல் பெண் நடத்துனராக ரம்யா  நியமிக்கப்பட்டுள்ளார்.

ரம்யா
ரம்யா மதுரை கோ.புதூர் லூர்து நகரில் வசித்து வருபவர். இவருக்கு பாலாஜி என்ற கணவரும், 9 ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர்.  பாலாஜி கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில்  ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். கொரோனாவில் பாலாஜி உயிரிந்ததை அடுத்து  கருணை அடிப்படையில் இவருக்கு இந்த வேலை கொடுக்கப்பட்டுள்ளது.  ரம்யாவின் கல்வித் தகுதிக்கு ஏற்ப அவருக்கு உடனடியாக கருணை பணி வழங்க போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். 
தமிழக அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தில் மதுரை உலகநேரி கிளையில் நடத்துநராக ரம்யா பணியில் சேர்ந்தார். அவருக்கு மதுரை - ராமேஸ்வரம் பேருந்தில் நடத்துனர் பணியில் உள்ளார். இவருக்கு  போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்  மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

அரசு பேருந்து
இது குறித்து ரம்யா   “கணவர் இறந்த நிலையில் குழந்தைகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்தேன். என் கோரிக்கை குறித்து முதல்வருக்கு கடிதம் அனுப்பினேன். அதற்கு உடனடியாக பலன் கிடைத்தது. கணவர் ஓட்டுநராக பணிபுரிந்த கிளையிலேயே எனக்கு நடத்துநர் பணி கிடைத்துள்ளது. பெண்களால் அனைத்து பணிகளையும் திறம்பட செய்ய முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக என் பணி இருக்கும். என்னைப் போல் பெண்கள் ஏராளமானோர் நடத்துநர் பணியில் சேர முன்வர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web