தொடரும் அட்டூழியம்... 6 தமிழக மீனவர்களைச் சிறைபிடித்த இலங்கை கடற்படை!

 
23 மீனவர்கள் சிங்களப் படையால் கைது: மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு தேவை! – டாக்டர் ராமதாஸ் 23 மீனவர்கள் சிங்களப் படையால் கைது: மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு தேவை! – டாக்டர் ராமதாஸ்

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் தளத்தில் இருந்து நேற்று காலை ஒரு நாட்டுப்படகில் 6 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்களைச் சூழ்ந்து கொண்டனர். இதனால் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்ற மீனவர்களிடையே பெரும் பதற்றமும், அச்சமும் நிலவியது.

மீனவர்கள்

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் நாட்டுப்படகை பறிமுதல் செய்ததுடன், அதிலிருந்த 6 மீனவர்களையும் அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் விசாரணைக்காகக் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்ட பின், அவர்கள் மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் சம்பவம் மீனவ கிராமங்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்தத் தொடர் கைது நடவடிக்கைகளால் ஜெகதாப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சோகம் நிலவி வருகிறது.