உடனே கரை திரும்புங்க... மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குள் செல்லத் தடை!

 
மீனவர்கள்


 
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நவம்பர் 21ம் தேதி  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக நவம்பர் 23ம் தேதி  தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

23 மீனவர்கள் சிங்களப் படையால் கைது: மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு தேவை! – டாக்டர் ராமதாஸ்

இந்நிலையில், விசைப்படகுகள், நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என நாகை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருக்கும் அனைத்து மீனவர்களும் நவம்பர் 23ம் தேதிக்குள் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.  வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதால் மறு அறிவிப்பு வரும் வரை நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் இலங்கை

வங்கக்கடலில் 23ம் தேதி தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில்  வீசக்கூடும். இதனையடுத்து  மறு அறிவிப்பு வரும்வரை நாகை மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றவர்கள் நவம்பர் 23ம் தேதிக்குள்  கரை திரும்பவும்  மீனவர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web