நாளை பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

 
மீனவர்கள்
 

ஆந்திர மாநிலம் திருவள்ளூர் மாவட்டத்தில்  ஸ்ரீஹரிகோட்டா சதிஷ் தவான் ராக்கெட் ஏவுதளம், பழவேற்காடு கடல் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. விண்ணில் ராக்கெட் ஏவப்படும் மற்றும் சோதனை பணிகள் மேற்கொள்ளும் காலங்களில் பாதுகாப்பு கருதியும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு பழவேற்காடு கடல் பகுதியில் குறிப்பிட்ட சுற்றளவிற்கு மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.

மீனவர்கள்

இந்நிலையில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து நாளை அதிகாலை 6.23 மணிக்கு என்.வி.எஸ்-02 என செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இஸ்ரோ100

இதற்கான 25 மணி நேர கவுன்ட்டவுன் இன்று அதிகாலை தொடங்கியுள்ளது.  நாளை ராக்கெட்  விண்ணில் செலுத்தப்பட இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது  குறித்த உத்தரவை  மீன்வள கூட்டுறவு சங்கம் மூலம்  திருவள்ளூர் மாவட்ட மீன்வளத்துறை  உத்தரவு பிறப்பித்துள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web