மீனவர்களே உஷார்! சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!

 
மீனவர்களே உஷார்! சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!


இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக வடமாநிலங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் பாதிப்பால் தமிழகத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தற்போது அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களே உஷார்! சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!


இது குறித்த செய்திக்குறிப்பு ஒன்றை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம். அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள், மன்னார் வளைகுடா மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்களே உஷார்! சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!


ஜூலை 25ம் தேதி தெற்கு வங்கக் கடல், மத்திய வங்கக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசலாம் . மேலும் ஜுலை 27 வரை கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

From around the web