கொடியேற்றத்துடன் தைப்பூசத் திருவிழா தொடக்கம் ... பழனி முருகன் கோவிலில் கோலாகலம்!

 
கொடியேற்றம்


தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் தைப்பூசத் திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. 
பழனி பெரியநாயகியம்மன் கோவிலில் 5ம் தேதி காலை, தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.

கொடியேற்றம்

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, பிப்ரவரி .10ம் தேதி வெள்ளித் தேரோட்டமும், திருக்கல்யாணமும், 11ம் தேதி தைப்பூசத் தேரோட்டமும், 15ம் தேதி தெப்பத்தோ் உலாவும் நடைபெற உள்ளது.  தைப்பூசத்துக்கு பழனிக்கு பாதயாத்திரையாக பக்தா்களுக்கு  20 நாட்களில் 4 லட்சம் பேருக்கு உணவு வழங்கத் தேவையான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது.

பழனி


தைப்பூசத்தையொட்டி, மலைக் கோயிலில் 3 நாள்களுக்கு சிறப்பு தரிசனக் கட்டணம் ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருத்தணியை போல பழனியிலும் தேரோட்டத் திருநாளின் போது அருகாமை இடங்களில் இருந்து வரும் பக்தா்களுக்கு இலவசப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார். 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web