சிறிய ரக வாடகை விமானம் விபத்து... 8 பேர் பலி!

 
flight

 

அமெரிக்காவின் மேற்கு அலாஸ்கா பகுதியில் 8 பேருடன் சென்ற வாடகை விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளனர். ஆங்கரேஜ் நகரிலிருந்து சுமார் 725 கி.மீ. மேற்கே அமைந்துள்ள கேப் நியூவென்ஹாம் நீண்டதூர ரேடார் தள விமான நிலையம் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்தச் சோகச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு அமெரிக்க ராணுவம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. இந்த விபத்து ராணுவ குடும்பத்தினருக்கும் அப்பகுதி மக்களுக்கும் மிகப்பெரிய இழப்பு என அமெரிக்க விமானப்படை அதிகாரி தெரிவித்துள்ளார். விபத்திற்கான காரணம் குறித்து உரிய அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.