விமானம் தரையில் மோதி விபத்து... விமானிகள் உட்பட 14 பேர் படுகாயம்... பகீர் வீடியோ!

 
flight flight

ஜெர்மனியில் உள்ள பிராங்க்பர்ட் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு போயிங் நிறுவனத்தின் ட்ரீம்லைனர் ரக விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. பயணிகள் அனைவரும் ஏறுவதற்கு ஆயத்தமாக இருந்த வேளையில் எதிர்பாராத விதமாக அந்த விமானத்தின் முன் சக்கரத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால் சக்கரம் திடீரென உள்வாங்கியதால் விமானத்தின் முன்பகுதி பலத்த சத்தத்துடன் தரையில் மோதி சரிந்தது.

இந்த 200 பேர் அமரக்கூடிய பெரிய ரக விமானத்தில் விபத்து நடந்த சமயத்தில் பயணிகள் யாரும் உள்ளே இல்லாததால் பெரிய அளவிலான உயிரிழப்புகளோ அசம்பாவிதங்களோ எதுவும் நிகழாமல் நல்வாய்ப்பாக தவிர்க்கப்பட்டது. எனினும் இந்த திடீர் விபத்தின் காரணமாக அங்கு பணியில் இருந்த விமானிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் காயம் அடைந்தவர்களை உடனடியாக மருத்துவ வாகனங்கள் மூலம் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த அசாதாரண விபத்து குறித்து அங்குள்ள உள்ளூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.