அதிர்ச்சி வீடியோ... சுற்றுலா விமானம் விழுந்து விபத்து... 13 பேர் பரிதாபப் பலி !

 
peru

பெரு நாட்டின் இகா பிராந்தியத்தில் உள்ள நாஸ்கா நகரம் அருகே சுற்றுலா விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் 11 பயணிகள் மற்றும் 2 விமானிகள் பலியாகியுள்ளனர். விமானம் விழுந்து தீப்பிடித்ததால் அப்பகுதியில் பெரும் சோகமும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

நாஸ்கா நகரத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பியூப்லோ விஜோ பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விவசாய நிலத்தில் விமானம் விழுந்ததாகப் பெரு நாட்டு அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.

Tourist plane crashes near Peru's Nazca Lines, killing 13

விமானம் விபத்துக்குள்ளானதற்கான உண்மையான காரணம் குறித்துக் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா சென்றவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.