கள்ளக்காதலனுடன் உல்லாசம்... மனைவியைக் கத்தியால் குத்திய கணவன் கைது!

 
கள்ளக்காதல் கள்ளக்காதல்

தஞ்சாவூர் பட்டுக்கோட்டை அருகே, கள்ளக்காதலனுடன் இருந்த மனைவியைக் கணவரே கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டுத் தனது மகனுடன் தப்பியோடிய நிலையில், தலைமறைவாக இருந்த கார் டிரைவர் ராஜாவைத் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள மயில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. கார் ஓட்டுநரான இவருக்கும், அட்சயா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி ஒரு மகன் உள்ளார். ராஜா தனது மனைவி அட்சயாவிடம் கடந்த சில மாதங்களாகவே கடுமையான நடத்தைக் குறைபாடு உள்ளதாகச் சந்தேகப்பட்டு வந்துள்ளார். இதனால் தம்பதியரிடையே அடிக்கடி வீட்டில் வாக்குவாதங்களும், கடுமையான சண்டைகளும் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், பாதிக்கப்பட்ட அட்சயா தற்போதைய ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் தீவிர ஆதரவாளராக உள்ளூர் வட்டாரத்தில் செயல்பட்டு வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

பலாத்காரம் காதல் கள்ளக்காதல்

இன்று வழக்கம் போல ராஜா வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பிய போது, வீட்டில் அட்சயா தனது கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்முன்னே பார்த்த கார் ஓட்டுநர் ராஜா ஆத்திரத்தின் உச்சக்கட்டத்திற்குச் சென்றுள்ளார்.

வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து, கண்மூடித்தனமாகத் தனது மனைவி அட்சயா மீது ராஜா சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் முகம், கை மற்றும் வயிற்றுப் பகுதிகளில் பலத்த கத்திக் குத்துக் காயங்களுடன் அட்சயா ரத்த வெள்ளத்தில் அலறியடித்துக் கீழே விழுந்தார். அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள், ராஜா தனது மகனைத் தூக்கிக்கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

கள்ளக்காதல் உல்லாசம் காதல் தம்பதி ஹனி ட்ராப்

படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அட்சயாவை மீட்ட பொதுமக்கள், அவரை உடனடியாகப் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காகத் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பியோடிய கணவரைத் தேட உடனடியாகத் தனிப்படை அமைத்தனர். தனிப்படை போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில், ராஜா தனது மகனுடன் தஞ்சை அருகேயுள்ள வல்லம் பகுதியில் ஒரு மறைவிடத்தில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிரடியாக அங்குச் சென்ற போலீசார், ராஜாவைச் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். அவரிடம் இந்தத் தாக்குதல் குறித்துப் போலீசார்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.