பல பெண்களுடன் உல்லாசம்... ஆபாச வீடியோக்களைக் காட்டி மனைவியை மிரட்டிய கணவன்!
மயிலாடுதுறை மாவட்டம் மங்கைமடம் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் அருண் (31), தனது 22 வயது மனைவியைத் தொடர்ந்து தாக்கி வந்த நிலையில், பல பெண்களுடன் தான் தொடர்பில் இருந்ததைக் காட்டி மனைவியை மிரட்டிய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தலைமறைவாக இருந்த அருணைக் கைது செய்துள்ளனர்.

மங்கைமடம் கிராமத்தைச் சேர்ந்த அருண் மற்றும் அவரது 22 வயது மனைவிக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அருண் தனது மனைவியை உடல்ரீதியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த மனைவி காவல்துறையில் புகார் அளித்தார்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், திருமணத்திற்குப் பிறகு தனது கணவர் அருணின் நடவடிக்கைகள் சரியில்லை என்றும், அவரது செல்போனில் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த முறையற்ற வீடியோக்கள் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தங்களுக்கு நடந்த முதலிரவு வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என அருண் தன்னைத் தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும் அவர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த அருணைத் தேடி வந்த காவல்துறையினர், அவரை அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் உள்ள வீடியோ மற்றும் புகைப்படக் காட்சிகளை சைபர் கிரைம் உதவியுடன் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
