ஜப்பானில் மிதவை ரெயில் சாதனை... மணிக்கு 603 கி.மீ. வேகத்தில் பறந்து அசத்தல்... வைரல் வீடியோ!
ஜப்பான் ரெயில்வே நடத்திய சோதனையில் 'எஸ்சிமெக்லவ்' எனப்படும் மின்காந்த மிதவை ரெயில் மணிக்கு 603 கி.மீ. வேகத்தை எட்டி உலக சாதனை படைத்துள்ளது. வழக்கமான மின்சார ரெயில்களைப் போலல்லாமல், இந்த அதிநவீன ரெயில் தண்டவாளத்திலிருந்து சுமார் 10 செ.மீ. உயரத்தில் மிதந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறைந்த வெப்பநிலையில் செயல்படும் சூப்பர் கண்டக்டிங் காந்தங்கள் வலுவான காந்தப் புலத்தை உருவாக்கி, பாதையின் இருபுறங்களிலும் உள்ள மின்காந்த சுருள்களுடன் இணைந்து ரெயிலை மிதக்கச் செய்கின்றன. நேரியல் மின்மோட்டார் மூலம் உருவாகும் நகரும் காந்தப்புலம் ரெயிலை முன்னோக்கி அதிவேகமாக உந்தித் தள்ளுகிறது.
புறப்படும்போது வேகத்தை எட்டப் பயன்படும் ரப்பர் சக்கரங்கள், குறிப்பிட்ட வேகம் எட்டியதும் மேலே மடங்கிக்கொள்ளும். மின்காந்தவியல், மீள்கடத்தும் இயற்பியல் மற்றும் மின்னணுவியல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள இந்தத் தொழில்நுட்பம், எதிர்காலப் போக்குவரத்தில் மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
