உஷார்... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக நீர்நிலை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “ தென் தமிழகத்தில் வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் கேரளா, முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் தொடர்ந்து வைகை அணைக்கு திறந்து விடப்படுகிறது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஏற்கனவே வைகை அணையின் மொத்த நீர்மட்டம் 71 அடியில், முன்னதாக 46 அடி மட்டுமே இருந்தது. தற்போது 69 அடியாக உயர்ந்துள்ளது.
இன்னும் 2 அடியில் வைகை அணையின் முழு கொள்ளளவு அளவை எட்டிவிடும். அதன் பிறகு வைகை அணையில் இருந்து நீர் பாசனத்திற்கு திறந்து விடப்படும். இதன் காரணமாக வைகைக் கரையில் அமைந்துள்ள தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்ட ஊர்களுக்கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை வைகை அணையின் பொதுப்பணித்துறை அதிகாரி விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.