நேபாள பெருவெள்ளம்.. பலியானோர் எண்ணிக்கை 616 ஆக உயர்வு; மீட்புப் பணிகள் தீவிரம்!

 
நேபாள்

நேபாள நாட்டில் பெய்துவரும் கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் ஏற்பட்ட பேரிடரில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளத்தில் சிக்கி இதுவரை 616 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமான 2,500 பேரின் நிலை என்னவென்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

நேபாள்

வெள்ளப்பெருக்கில் சிக்கிப் படுகாயமடைந்த 2,301 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் காயமடைந்த 140 பேருக்குத் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நேபாள் வெள்ளம்

காணாமல் போனவர்களைத் தேடும் பணியும், பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கான நிவாரண மற்றும் மறுவாழ்வுப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன