அமெரிக்காவில் குடியிருப்பு பகுதியில் தனியார் விமானம் விழுந்து 9 பேர் பலி!
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் குடியிருப்புப் பகுதியில் சிறிய ரக தனியார் விமானம் விழுந்து வெடித்துச் சிதறிய விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 9 பேரும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
FLORIDA PLANE CRASH: NINE DEAD A devastating aviation disaster has claimed nine lives in Palm Beach County, Florida, after a private jet crashed in a residential neighbourhood, leaving behind a burning crater. The aircraft was travelling from Austin, Texas, to the Bahamas when it plunged nose-first into the ground, approximately nine miles from Mar-a-Lago. Shocked residents and onlookers witnessed the aftermath of the deadly impact as flames engulfed the crash site. All nine people aboard the aircraft died in the catastrophe. Their identities have not yet been established, leaving families and authorities awaiting crucial answers. The circumstances surrounding the crash remain under investigation, with officials expected to examine what led the aircraft to come down in a residential area. The tragedy has raised fresh concerns over the devastating consequences of aviation accidents near populated neighbourhoods. Investigators are now working to establish what happened during the flight and determine the cause of the fatal crash. #Florida #PlaneCrash #BreakingNews #AviationDisaster #PalmBeachCounty #USNews https://t.co/j40qo2VRcW
— Diganta Guha (@diganta_guha) November 2, 2026
பாம்பார்டியர் நிறுவனத்தின் ‘லியர்ஜெட் 60’ ரக விமானம், டெக்சாஸ் மாகாணத்தின் ஆஸ்டின் விமான நிலையத்தில் இருந்து பஹாமாஸ் நாட்டுக்குப் புறப்பட்டது. நவம்பர் 1-ம் தேதி மதியம் சுமார் 12.50 மணியளவில், புளோரிடாவின் பாம் பீச் கவுண்டி பகுதியில் உள்ள குடியிருப்புக்கு அருகே விமானம் திடீரென கீழே விழுந்து தீப்பிடித்தது.
விமானத்தில் இருந்த 9 பேரும் உயிரிழந்ததாக அமெரிக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். விமானம் விழுந்த இடத்தில் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டதுடன், தீ மற்றும் புகை பரவியது. அருகிலுள்ள மொபைல் வீடுகள் அமைந்த பகுதியில் வசித்த சுமார் 600 பேர் பாதுகாப்பு காரணமாக வெளியேற்றப்பட்டு, தற்காலிக முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.
விபத்துக்கு முன்பு விமானத்தில் பனிப்படலம், மிதமான காற்றுக் கொந்தளிப்பு மற்றும் மழை தொடர்பான சிக்கல்கள் இருந்ததாக விமானி கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்திருந்தார். பின்னர் விமானம் வேகமாகக் கீழிறங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
