பின்தொடர்ந்த இளைஞரின் கன்னத்தில் ப்ளார் விட்ட மாணவி.. வைரலாகும் வீடியோ!
தன்னைப் பின் தொடர்ந்து வந்து டார்ச்சர் செய்துக் கொண்டிருந்த இளைஞரின் கன்னத்தில் பள்ளி மாணவி ஒருவர் பளார் விட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள கான்பூரில் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமிகளை இரு சக்கர வாகனத்தில் வரும் மர்மநபர்கள் தொடர்ந்து வந்து அடிக்கடி தொல்லைக் கொடுத்து வந்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 6ம் தேதியும் பள்ளிக்கு செல்லும் மாணவிகளை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் பொதுமக்கள் முன்னிலையில் மாணவிகளை தாக்கிய்யுள்ளனர்.
"स्कूल से घर लौट रही छात्रा से सरेआम हुई छेड़छाड़, CCTV में कैद"
— निशान्त शर्मा (भारद्वाज) (@Nishantjournali) August 6, 2024
उत्तर प्रदेश: बुलन्दशहर के खानपुर में बाइक सवार मनचलों ने स्कूल से लौट रही छात्राओं से की छेड़छाड़ ,अक्सर स्कूल आते जाते वक्त छात्राओं का पीछा करते हैं मनचले ,बाइक सवार दो मनचलों ने सरे बाजार छात्राओं से की मारपीट… pic.twitter.com/DX4d5jYwkI
பதிலுக்கு மாணவி ஒருவர் தைரியமாக சென்று மர்ம நபரை கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, கான்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
