பெங்களூருவைத் தொடர்ந்து சென்னைக்கும் ஆபத்து... இந்த 5 இந்திய நகரங்கள்... தண்ணீர் பஞ்சத்தால் தத்தளிக்கும்... வெளியான பகீர் தகவல்!

 
தண்ணீர்

பெங்களூருவில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகையில், பெங்களூருவைத் தொடர்ந்து சென்னையும் தண்ணீர் பஞ்ச சிக்கலில் சிக்கும் அபாயம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில்  சென்னை, பெங்களூரு, ஜெய்ப்பூர், டெல்லி மற்றும் மும்பை ஆகிய  5 நகரங்களில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடும் என்று ஆய்வு தகவல் வெளியாகி அதிர்ச்சியளிக்கிறது. 

தண்ணீர்


டெல்லி மக்கள் ஏற்கெனவே  காற்று மாசுபாடு காரணமாக  இயல்பு வாழ்க்கையை பெருமளவில் இழந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த கோடை காலத்தில் டெல்லியின் பல பகுதிகள் தண்ணீர் பஞ்சத்தில் சிக்கித் தவிக்கும் என்று அச்சுறுத்துகின்றன தகவல்கள். 
மும்பையில் நீர் ஆதாரங்கள் குறைந்து வருவது, சீரற்ற மழை போன்றவைகளால் இந்த கோடையில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. 

உலக தண்ணீர் தினம்
அதே போன்று சென்னையில் அதிகளவில் மழை இருந்தாலும், திறமையற்ற நீர் மேலாண்மை, தண்ணீரை சேமித்து வைக்க தெரியாத நிர்வாகம், பயன்பாடு மற்றும் தண்ணீர் சிக்கனம் குறித்து சென்னை மக்களிடையே விழிப்புணர்வு இல்லாததால் கடும் தண்ணீர் பஞ்சத்தை அனுபவிக்கும் இந்தியாவின் முக்கிய நகரங்களின் பட்டியலில் சென்னையும் இருக்கிறது. 
ஏற்கெனவே போதிய மழை இல்லாமல் ராஜஸ்தான் தலைநகரான பெருகும் மக்கள்தொகை, போதிய மழையின்மை காரணமாக ஜெய்பூரிலும் கடும் தண்ணீர் பஞ்சம் உருவாகும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web