மதுபானங்களுக்கு ரூ. 20 வரை புதிய வரி விதிப்பு - சட்டமன்றத்தில் மசோதா தாக்கல்!
தமிழ்நாட்டில் மதுபான விற்பனையின் மீது கூடுதலாக 'சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி' விதிக்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு சட்டசபையில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன், 'தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச் சட்டம், 2006'-ல் திருத்தம் மேற்கொள்வதற்கான புதிய மசோதாவைத் தாக்கல் செய்தார்.

மதுபானப் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல நடவடிக்கைகளுக்காகவும் இந்த சிறப்பு வரி வசூலிக்கப்படவுள்ளது. இந்த புதிய வரியானது, தற்போது மதுபானங்கள் மீது நடைமுறையில் உள்ள வாட் வரியுடன் கூடுதலாகச் சேர்த்து வசூலிக்கப்படும்.

மதுபானத்தின் வகை, அதன் அளவு மற்றும் கொள்கலனின் அளவைப் பொறுத்து இந்த வரி மாறுபடும் என்றும், ஒரு மதுப்பாட்டிலுக்கு அதிகபட்சமாக ரூ. 20 வரை இந்த புதிய வரி நிர்ணயிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
