‘நாட்டின் நலனைவிட சிலருக்கு கட்சி நலனே முக்கியமாகிவிட்டது’ - பிரதமர் மோடி

 
வெளிநாடு மோடி பயணம் வணக்கம்

சிலருக்கு நாட்டின் நலனைவிடக் கட்சி நலனே முக்கியமாகிவிட்டதாகப் பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான போராட்டம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், கட்சி நலனைவிட நாட்டின் நலனே முக்கியம் எனத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், சிலருக்கு நாட்டின் நலனைவிடக் கட்சி நலனே முக்கியமாகிவிட்டதாகப் பிரதமர் நரேந்திர மோடி சாடியுள்ளார். எப்போதும் கட்சி நலனைவிட நாட்டின் நலனுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மோடி

பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான போராட்டம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருவதாகச் சுட்டிக்காட்டிய பிரதமர், மகளிர் இடஒதுக்கீடு மசோதா காலத்தின் கட்டாயம் என்றும், அதற்கான திருத்தம் தற்போதைய காலத்தின் அவசியமான கோரிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.