குஷியில் மாணவர்களுக்கு... செப்டம்பரில் மொத்தம் 13 நாட்கள் பள்ளி விடுமுறை!

 
மாணவர்கள் மகிழ்ச்சி

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் 2026-27 ஆம் கல்வியாண்டு நாட்காட்டியின்படி, நடப்பு செப்டம்பர் மாதத்தில் தொடர் அரசு விடுமுறைகள், வார இறுதி நாட்கள் மற்றும் காலாண்டுத் தேர்வு விடுமுறைகள் என மொத்தம் 13 நாட்கள் விடுமுறை வரவுள்ளது மாணவர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வருகிற செப்டம்பர் 4-ம் தேதி கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 5 ஆசிரியர் தினம் மற்றும் செப்டம்பர் 6 ஞாயிற்றுக்கிழமை என வார இறுதி நாட்கள் வருவதால், மாதத்தின் தொடக்கத்திலேயே தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

விடுமுறை பள்ளி மாணவர்கள்

செப்டம்பர் 12 (இரண்டாவது சனிக்கிழமை), செப்டம்பர் 13 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் செப்டம்பர் 14 (விநாயகர் சதுர்த்தி) ஆகிய நாட்களைத் தொடர்ந்து மீண்டும் ஒரு தொடர் 3 நாட்கள் விடுமுறை மாணவர்களுக்குக் கிடைக்கவுள்ளது.

பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்புப்படி, காலாண்டுத் தேர்வுகள் நிறைவடைந்து செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் காலாண்டு விடுமுறை தொடங்குகிறது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் 5 நாட்களும், அக்டோபர் 4 வரை தொடரும் விடுமுறையின் ஒரு பகுதியாகவும் காலாண்டு விடுமுறை அமைகிறது.

விடுமுறை பள்ளி

அரசு விடுமுறைகள் மற்றும் வார இறுதி நாட்களுடன் காலாண்டு விடுமுறையும் சேர்ந்து வருவதால், செப்டம்பர் மாதத்தில் மட்டும் மொத்தமாக 13 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதனால் குடும்பத்துடன் வெளியூர் பயணங்களுக்குத் திட்டமிடுவோர் தற்போதே முன்பதிவுகளைத் தொடங்கிவிட்டனர்.