வரலாற்றில் முதன்முறை... சேப்பாக்கம் மைதானத்தில் பிக்பாஷ் லீக் தொடக்க ஆட்டம்!

 
பிக்பாஷ் லீக்

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற பிக்பாஷ் லீக் கிரிக்கெட் தொடரின் வரலாற்றிலேயே முதல்முறையாக வெளிநாட்டில் தொடக்க ஆட்டம் நடைபெறவுள்ளது. இப்போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் வரும் டிசம்பர் 12-ஆம் தேதி நடக்க உள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் பிரபல டி20 தொடரான பிக்பாஷ் லீக்கின் 16-வது சீசன் தொடக்க ஆட்டம், வரலாற்றிலேயே முதன்முறையாக வெளிநாடான இந்தியாவின் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டிசம்பர் 12 அன்று நடைபெறுகிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் போட்டியில், நடப்பு சாம்பியனான பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த வெளிநாட்டுப் போட்டி நடத்தப்படுவதாக லீக் நிர்வாகி பில் ரிக்பி தெரிவித்துள்ளார். மேலும், இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை அடுத்த மாதம் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.