தமிழகத்தில் முதன்முறை... சேலம் அரசுப் பள்ளிக்கு ISO தரச் சான்று வழங்கி கௌரவம்!

 
சேலம் அரசுப் பள்ளிக்கு ISO

தமிழகத்திலேயே முதன்முறையாக அரசுத் தொடக்கப் பள்ளி ஒன்று சர்வதேசத் தரச் சான்றான ISO அங்கீகாரத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது. சேலம் மாவட்டம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு இந்த உயரிய தரச் சான்று வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பான செயல்பாடுகள் மற்றும் சர்வதேசத் தரத்திற்கு இணையான வசதிகளைப் பாராட்டி ISO சான்று வழங்கும் நிறுவனம் இந்த அங்கீகாரத்தை அளித்துள்ளது. நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்குத் தரமான கல்வி வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரமான குடிநீர், தூய்மையான கழிப்பறை வசதிகள் மற்றும் மாணவர்களுக்குப் பாதுகாப்பான கற்றல் சூழல் சிறப்பாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையான உள்கட்டமைப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அரசுப் பள்ளி ஒன்றிற்கு முதன்முறையாக கிடைத்துள்ள இந்தச் சர்வதேச அங்கீகாரம், தமிழக அரசுப் பள்ளிக் கல்வித்துறைக்குக் கூடுதல் பெருமையைச் சேர்த்துள்ளது.