தமிழக அரசியல் வரலாற்றில் புதிய மைல்கல் - முதன்முறையாக விசிக அமைச்சர் மானியக் கோரிக்கை தாக்கல்!

 
வன்னி

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடர் வழக்கமான வினாக்கள்-விடைகள் நேரத்துடன் தொடங்கிய நிலையில், மாநில அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது.

வன்னி

தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதல்முறையாக விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அமைச்சரான வன்னி அரசு, பேரவையில் தனது துறை சார்ந்த மானியக் கோரிக்கையை முறைப்படி தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

விசிக வன்னி அரசு

விசிக வரலாற்றிலும், தமிழ்நாட்டின் தற்கால அரசியலிலும் இந்த நிகழ்வு ஒரு முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுவதால், சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்வுகள் மீது அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது.