வெளிநாட்டினரை கடத்தி கொத்தடிமை வேலைக்காக விற்பனை.. முக்கிய ஏஜெண்ட் புதுச்சேரியில் கைது..!!

 
புதுச்சேரி ஏஜெண்ட் எஸ்.கே.பாபு

இந்தியாவில் சட்டவிரோதமாக நுழைந்தவர்களை கடத்தி கொத்தடிமை வேலைக்காக விற்பனை செய்யும் ஏஜெண்டை புதுச்சேரியில் போலீசார் கைது செய்தனர்.

வடகிழக்கு மாநிலங்களான மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் பங்களாதேஷ், மியான்மர் நாடுகளை சேர்ந்தவர்கள் சட்டவிரோதகமாக நுழைவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இப்படி இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களை கடத்தி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு கொத்தடிமைகளாக ஒரு கும்பல் விற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.  அசாம் மாநிலத்தில் இதுதொடர்பாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் வெளிநாட்டினரை கடத்தி விற்பதில் ஏஜெண்டுகள் பங்கு வகித்து வந்ததாக கூறப்பட்டது.

இந்தியாவுக்குள் ஊடுருவிய வங்கதேசத்தினர்... 4 பேரை கைது செய்த NIA  அதிகாரிகள்.! - Dinasuvadu

இந்த ஏஜெண்டுகளின் பட்டியலை எடுத்து தேசிய புலனாய்வு  முகமை (என்ஐஏ)  விசாரணை செய்து வந்தது. இதன் பேரில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடு முழுவதும் சந்தேகத்துக்கு இடமான இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சென்னையில் பள்ளிக்கரணை, மறைமலைநகர், படப்பை உட்பட பல பகுதிகளில் சோதனை நடந்தது. புதுச்சேரியில் எல்லை பிள்ளை சாவடி 100 அடி சாலையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை எதிரே ஆசிரமத்துக்கு சொந்தமான இடம் ஒன்று உள்ளது. இங்கு காம்பவுண்டு சுவரையொட்டி பழைய பொருட்கள் போட்டு வைத்திருக்கும் கிடங்கு உள்ளது. இதன் மாடியில் என்ஐஏ அதிகாரிகள் 5 பேர் உள்ளூர் காவல்துறையினர் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். 

அப்போது, அங்கு தங்கியிருந்த மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த எஸ்.கே.பாபுவிடம்   விசாரணை நடத்தினர். விசாரணையில், பாபுவிடம் இருந்து ஐபோன், ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றினர். பின்னர் அவரை கைது செய்து கோரிமேட்டில் உள்ள என்ஐஏ அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். வெளிநாட்டிலிருந்து நபர்களை கடத்தி வந்து புதுச்சேரி உட்பட வெளிமாநிலங்களில் கொத்தடிமைகளாக விற்பனை செய்தாரா? எத்தனை பேரை அழைத்து வந்தார்? எங்கு விற்றார்? வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் இவர்களுக்கு தொடர்புள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

NIA arrests Kolkata man for kidnapping and selling foreigners in Puducherry vel

கொல்கத்தாவில் செய்த குற்றத்திற்காக பாபுவை கைது செய்து இருப்பதாக உள்ளூர் போலீசாரிடம் என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதுச்சேரியில் கட்டிடட வேலையில் பாபு ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் அவர் வைத்திருந்த ஆதார் எண்ணை உள்ளூர் காவல்துறையினர் சோதனையிட்டதில் எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை. இதனால் அவரது பெயர், ஆதார் எண் என அனைத்தும் போலியாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

From around the web