கையில் பாம்புடன் வீடியோ... யூடியூபர் TTF வாசன் வீட்டில் வனத்துறையினர் சோதனை!
சமீபத்தில் மலைப்பாம்பை கையில் வைத்துக் கொண்டும், முத்தம் கொடுத்தும் வீடியோ வெளியிட்டு பிரபல யூடியூர் டிடிஎஃப் வாசம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் டிடிஎஃப் வாசன் வீட்டில் வனத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனார்.
கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் யூடியூபர் டிடிஎப் வாசன். சென்னையில் உள்ள வீட்டில் மட்டுமே பாம்பு உள்ளிட்டவற்றை வைத்து டிடிஎஃப் வாசன் பராமரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டுவது, காரை அஜாக்கிரதையாக இயக்குவது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் மலைப்பாம்பை கையில் வைத்துக் கொண்டு வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தான் அந்த பாம்பை உரிமம் பெற்று வளர்த்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், பாம்பை வளர்ப்பதற்கு உரிமம் பெற்றிருந்தாலும் இப்படி பாம்பை துன்புறுத்தும் விதமாக வீடியோ வெளியிட்டது குறித்து டிடிஎப் வாசன் வீட்டில் வனத்துறையினர் தற்போது சோதனையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.